
ராயபுரத்தில் மாடியில் இருந்து விழுந்து பிளஸ்1 மாணவி பலி போலீசார் விசாரணை
திருவொற்றியூர், கிராமத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் காவியா (வயது 16) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் – 1 படித்துவந்தார்.
நேற்று காலை காவியா ராயபுரம், தொப்பை தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். 2–வது மாடியில் உள்ள வீட்டில் தோழிகளுடன் நின்றார். அப்போது திடீரென காவியா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவியா இறந்து போனார். மாடியில் இருந்து குதித்து காவியா தற்கொலை செய்தாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel