
ஜமுரியா: மேற்கு வங்க மாநிலம், பரத்மான் மாவட்டத்தில் ஜமுரியா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு வங்க சட்டப் பேரவையில் உள்ள 31 தொகுதிகளுக்கும் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
Patrikai.com official YouTube Channel