மியான்மரில், அதிபராக பதவியேற்ற ஔங்க்-சன்-சு- கி, 200 அரசியல் போராளிகள் மீதான 199 வழக்குகளை வாபஸ் பெற்று, அவர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். சரியான ஆய்விற்கு பிறகு மேலும் பல போராளிகள் விடுதலை செய்யப் படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்பட்டவர்களின் சென்ற ஆண்டு கல்விக்காகப் போராட்டம் நடத்தி கைது செய்யப் பட்ட மாணவர்களும் அடங்குவர்.
மேலும், தண்டனை அளிக்கப் பட்டுள்ள கைதிகளுக்கும், ம்யான்மர் ஜனாதிபதியின் கருணை மனு அளித்து விடுதலை செய்யப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.