palali_modi
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவிலில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 86 ஆக அதிகரித்துள்ளது. 350 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கியோரை மீட்க கோவை சூலூரில் இருந்து இந்திய படைக்கு சொந்தமான 4 ஹெலிகாப்டர்கள் கேரளா சென்றுள்ளன.
கேரளாவின் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தீவிபத்து சம்பவம் இதயத்தை உலுக்கிவிட்டதாகவும் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட, பிரதமர் மோடி கேரளா வருகிறார் என்று தகவல் வந்துள்ளது. முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளார் மோடி.