
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவிலில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 86 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் கோவிலுக்கு சொந்தமான கட்டடம் முற்றிலும் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கோவில் திருவிழாவின் போது பட்டாசுகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த தீவிபத்து நெஞ்சை உலுக்கிவிட்டதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel