இந்தியாவில் உள்ள மதங்களும் அதன் வழிபாட்டு முறைகளும் மிகுந்த சிக்கலும் விநோதமும் நிறைந்தவை. நாம் அவற்றை புரிந்துக்கொள்ள முனையும் பொழுது நமக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றது.
பல்வேறு மதங்களுக்கிடையிலான சடங்குகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. அதற்கு நல்ல உதாரணம் :திருப்பதி அருகே உள்ள ஒரு வெங்கடேஷ்வரா திருக்கோவில் ஆகும்.
ஆந்திரா கடப்பா மாவட்டத்தில், திருப்பதியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வெங்கடேஷ்வரா திருக்கோவில். இங்கு அருள்பாளிக்கும் வெங்கடேஷ்வரா வை முஸ்லீம்கள் தங்களின் மருமகனாக போற்றுகின்றனர். கி.பி. 1311-ல், மாலிக் காபூர் எனும் அரசரின் மகளான பிபி நன்சரம்மா எனும் முஸ்லிம் பெண்மணியை கடவுள் வெங்கடேஷ்வரா திருமணம் செய்துகொண்டதாக அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். ஒவ்வொரு யுகாதியன்றும் காலை 5 மணிமுதல் மாலை 6 மணி வரை கோவிலை நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வழிப்பட்டனர்.
புராணப் படி, ஒருமுறை விஷ்ணுவை கல்லாகப்போய்விடுவாய் என சபித்ததற்கு வருந்தி, ஸ்ட்சுமி, மீண்டும் மண்ணில் அவதரித்து முழுமனதுடன் விஷுன்வின் இதயத்தில் இடம் பிடிக்க முடிவு செய்து ராமாயனத்தில் சீதியை எப்படி ஒரு தாமரைப் பூவில் கண்டெடுக்கப் பட்டாரோ அதேப் போன்று லட்சுமி ஒரு தாமரைப் பூவில் தோன்ற, முஸ்லிம் மன்னர் காபூல் அவரைக் கண்டெடுத்து நன்ச்சரம்மா எனப் பெயரிட்டு சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தார். எனினும், நன்ச்சரம்மாவுக்கும் இந்துப் புராணங்களின் மீது நாட்டம் அதிகரித்து, விஷ்ணுவினை மனமுருகி பிரார்த்தனை செய்து வந்ததில் மகிழ்ச்சியடைந்த விஷ்ணு, அவருக்கு ஒரு நாள் அவரது வீட்டில் (இதயத்தில்) இடம் கொடுத்து கௌரவித்தார்.
அன்று முதல், பத்மாவதித் தாயாரும், மஹாலக்ஷ்மி என்கிற பீபி நன்ச்சரம்மா என இரு மனைவியர் உள்ளதாக இந்து மக்களால் நம்பப் படுகின்றது.
புராணக் கதை: மூலம் ,
நன்றி :