
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “திமுக கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றம்தான். ஆனால், ஜோதிமணி அதை தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஜோதிமணி பிரசாரம் செய்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியில் ஜோதிமணிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. எனவே, இதனை பெரிதாக்க வேண்டாம்.
சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று கூறியிருக்கிறார். அது கோபத்தில பேசியது. அவர் கோபத்தில் இருக்கிறார் என்பது தெரியும். ஆனால், அந்த எண்ணத்தை அவர் விட்டுவிட வேண்டும். மீறி சுயேட்சையாக போட்டியிட்டால், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இளங்கோவன் எச்சரித்தார்.
Patrikai.com official YouTube Channel