“மணல் கொள்ளையர் கே.சி.பி. எனப்படும் கே.சி.பழனிசாமிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். துணை போகிறார்” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார் ஜோதிமணி. ஆனால் அந்தத் தொகுதி, கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அரவக்குறிச்சியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜோதிமணி, “”காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல், கேட்டுக் கொண்டும், அரவக்குறிச்சி தொகுதியை தர தி.மு.க. மறுத்துள்ளது” என்றும் தெரிவித்தார்.
அவரது குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.