
பிரிட்டனில் கிளாம் ஷரோன் கட்ஸ் என்ற 55 வயது பெண்மணி ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார். நான்கு குழந்தைகளுக்குப் பாட்டியான ஷரோன், செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இந்த 3 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
பிரிட்டனின் அரசு மருத்துவமனைகளில் 42 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே செயற்கைக் கருத்தரிப்பு சேவைகளை வழங்கி வருவதால், தனியார் மருத்துவமனையை அணுகிய அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. குழந்தை பிறக்கும்போது மிகவும் வயதான தோற்றம் இருக்கக் கூடாது என்பதற்காக, வயதைக் குறைத்து காட்டுவதற்கான மருத்துவத்தை மேற்கொண்டதாக ஷரோன் தெரிவித்தார். 55 வயதில் 3 குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஆபத்தானது என்பதால் மூன்றில் ஒரு குழந்தையைக் கலைத்துவிடும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், அதற்குத் தான் மறுத்து விட்டதாகவும அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel