
சிறந்த இயக்குநர் என்று பெயர் பெற்ற அமீர், தற்போது ஒதுங்கி இருக்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு இடைவெளிவிட்டுவிட்டார்.
அந்த இடைவெளியை அதிரடியாக நிரப்ப களம் இறங்கிவிட்டார் அமீர். ஆர்யா நடிக்கும் இந்தப்படத்தில் அமீரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
“ஒரு ஊரில் ஒரு இராஜகுமாரி’ படத்தைத் தயாரித்த ஜி.ஹெச்.வேணுதான் இந்த புதிய படத்தை தயாரிக்கிறார். வேணு, பிரம்மாண்டம் காண்பிப்பதில் வல்லவர். “ஒ.ஊ. ஒ. ரா” படமே அதைச் சொல்லும்.
ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையாததால். திரையுலகைவிட்டே ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில்தான் அமீர் சொன்ன கதை வேணுவை ரொம்பவே பாதித்துவிட்டதாம்.
ஆகவே அந்தக் கதையை தயாப்பதில் இறங்கிவிட்டாராம்.
Patrikai.com official YouTube Channel