
நடிகை ஐஸ்வர்யா தத்தா படப்பிடிப்புக்கு வராததால் தயாரிப்பாளருக்கு ரூ 3 லட்சம் நஷ்டம் என்று முன்பு செய்தி வெளியானது.
இதற்குக்காரணம் ஜஸ்வர்யா தத்தா இல்லையாம் அவரது மேனஜரான மேனேஜரான ஷான் என்பவர்தான் என்று இப்போது தெரியவந்திருக்கிறது.
“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு முன்னதாகவே முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார் தயாரிப்பாளர். அந்த பணத்தை தத்தாவின் சார்பில் வாங்கிய மேனேஜர் ஷான், அபேஸ் செய்துவிட்டார். அதோடு, தயாரிப்பாளர் பணம் தரவில்லை என்று தத்தாவிடம் சொல்லிவிட்டார்.

இதை நம்பிய தத்தா, செல்போனை ஆஃப் செய்துவிட்டு நாட் ரீச்சபிளுக்கு போய்விட்டார்.
வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் போலீஸில் புகார் செய்யப்போக… தகவல் அறிந்த தத்தா, ‘அந்த மேனேஜரை நான் இரண்டு நாட்களுக்கு முன்பே வேலையை விட்டு நீக்கிவிட்டேன். நீங்கள் ஏன் . எனக்குத் தெரியாமல் பணம் கொடுத்தீர்கள்” என்று கேட்டிருக்கிறார்.
‘அவரை நீக்கியதை ஏன் முன்பே சொல்லவில்லை” என்கிறார் தயாரிப்பாளர்.
பஞ்சாயத்து நீண்டு கொண்டே போகிறது. தத்தா மீது போலீஸில் புகார் கொடுக்கப்போவதாக கூறுகிறது தயாரிப்பாளர் தரப்பு.
Patrikai.com official YouTube Channel