
சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதியின் கற்பனை நாயகியாக வந்த உள்ளம் கவர் கள்வி(!), சஞ்சிதா ஷெட்டி. .பீட்சா-2 படத்திற்கு பிறகு தமிழ் தலை காட்டாமல் இருந்த இவரை தேடிப்பிடித்து ‘ரம்’ படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
விஜய் தயாரிப்பில் உருவாகும் இது முழு நீள த்ரில்லர். படம் முழுக்க இரவிலேயே நடக்கிறதாம். ஆகவே படப்பிடிப்பு எப்போதும் இரவில்தான். அப்படி ஒருநாள் படப்பிடிப்பு.
சக நடிகர்களான ரிஷிகேஷ், விவேக் மற்றும் அம்ஜத் ஆகிய மூன்று பேரையும் காரின் பின் சீட்டில் அமரவைத்து ஷெட்டி காரை படு ஸ்பீடாக ஒட்டிக்கொண்டு போக வேண்டும். ”டூப் வேண்டாம் நீங்களே ஓட்டுங்கள்” என்று டைரக்டர் சாய் கூறிவிட்டார்.
காரை எடுத்த சஞ்சிதா, எடுத்த உடனேயே; டாப் கியரைத் தூக்கியிருக்கிறார். காட்சி ஓகே ஆகிவிட்டது. ஆனால் பின் சீட்டில் அமர்ந்து பயணித்த மூன்றுபேரும்தான் கதிகலங்கி போய்விட்டார்கள்.
“என்ன இப்படி ஓட்டுகிறாயே..” என்று அவர்கள் நொந்துபோய்கேட்க,சஞ்சிதா கூலாக, “ எனக்கு அரைகுறையாகத்தான் கார் ஓட்டத்தெரியும். டைரக்டர் சொல்லிட்டாரேன்னு ஓட்டனேன்” என்று சொல்ல, அதிர்ந்து போய்விட்டார்களாம் மூவரும்.
Patrikai.com official YouTube Channel