ஒரு ராக்கெட்டுடன், வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை இஸ்ரோ இணைத்து அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக கடந்த 2008-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி-9 ராக்கெட்டுடன், 10 செயற்கைகோள்கள் இணைத்து அனுப்பப்பட்டன. இதுவே இஸ்ரோவின் சாதனையாக இருந்தது.
இந்த சாதனையை தானே முறியடிக்கும் வகையில் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி.-34 ராக்கெட்டில் 22 செயற்கைகோள்களை இணைத்து அனுப்ப உள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து பணிகளும் வெற்றி அடையும் பட்சத்தில், இந்த ராக்கெட்டு விண்ணில் பாய்வதற்கான ‘கவுண்ட்டவுண்’ மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.