10th
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்து 371 மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் எழுதிவருகிறார்கள்.
தமிழ் தேர்வு, ஆங்கில தேர்வு ஆகியவை நடந்து முடிந்துவிட்டன. கணித தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 13-ந்தேதி முடிவடைய உள்ளது.
விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 15-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது. 10ம் வகுப்பு விடைத்தாள்கள் 32 மாவட்டங்களில் 78 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட இருக்கிறது.