தண்ணீரைக் குடித்தவுடன் மக்கத் துவங்கும் பாட்டில்: மாணவர் தயாரிப்பு.
ஐஸ்லாந்து கலை அகாடமி மாணவரான அரி ஜான்ஸன், ஒரு தயாரிப்பு வடிவமைப்பு மாணவர், பாசி போன்ற பொருட்களில் இருந்து ஒரு மக்கும் பாட்டில் தயாரித்துள்ளார்.
ஜான்ஸன் சிவப்புப் பாசி தூள் மற்றும் தண்ணீர் கொண்டு மேதைத்தனமான மக்கும் பாட்டிலை உருவாக்கிஉள்ளார். இதை செய்யத் தம்மை தூண்டியது எது என்ற கேள்விக்கு : ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அழுக 450 ஆண்டுகள் வரை எடுக்கும். எனவே, நமது பூமியைக் காக்க இந்த பாட்டிலை தயாரித்துள்ளதாக ஜான்சன் கூறினார்.
தண்ணீர் உள்ளே இருக்கும் வரை நிலையாய் உள்ள பாட்டில், தண்ணீரைப் பருகியவுடன், மக்கத் துவங்கிவிடும். இது 100% இயற்கைப் பொருட்களால் ஆனது. எனவே தண்ணீர் பருகுவதற்கு பாதுகாப்பானது” என ஜான்சன் கூறினார்.