வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் எதிராக: ஆப்கானிஸ்தான் அணியால் பெரிய அணிகளுக்கெதிராகவும் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என அந்த அணியின் பயிற்சியாளர் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி குறைந்த ஸ்கோரான 123-7 குவித்திருந்தாலும், அதன் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸை 117-8 எனச் சுருட்டி, ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தங்களின் முதல் வெற்றியை ருசித்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி, சுழற்பந்துக்கு சாதகமான நாக்பூர் மைதானத்தில் விளையாடிதான் ஸ்காட்லாந்து, ஹாங்காங் மற்றும் ஜிம்பாப்வே _ அணிகளை வென்று பின்னர் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஒரே ஒரு வெற்றியை இந்த அணி பெற்றாலும், இலங்கை, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு கடினமான நேருக்குதலைக் கொடுக்கத் தவறவில்லை.
ஆப்கானிஸ்தானின் வெற்றியை கிரிஸ் கெயில் அந்த அணீயினருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டாடினார். எதிரணியினரின் வெற்றியை அவர்களுடன் கொண்டாடுவது கிரிக்கெட் போட்டியில் இதுவரைக் காணாத நிகழ்வு.
ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் இன்சமாம்-உல்-ஹக் 20 ஓவர் உலக கோப்பை நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஞாயிறன்று பெற்ற வெற்றி, இனி அடிக்கடி டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கெதிராக போட்டியிடும் வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைக்க வழிசெய்யும் என நம்புகிறார்.
பிரபல முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும், இன்றைய ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் இன்சமாம், , “நாடுகளுக்கெதிராக அதிக வாய்ப்புகளை கிடைத்தால் இந்த அணி மிகவும் சிறப்பாக விளையாட முடியும்” என்றார்.
இந்த அணியின் முகமது ஷாசத் 222 ரன் களைக் குவித்து, இந்த பந்தயத்தின் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இது விராத் கோலி அடித்துள்ள ரன்னைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் ராம்தின் பதவி நீக்கம் செய்ய ஒரு ஸ்மார்ட் ஸ்டம்பிங் பிறகு, ஆப்கானிஸ்தான் கீப்பர் முகமது ஷாசத் கிறிஸ் கெய்ல் பாணியில் ஒரு நடனம் ஆடினார். அதனை பார்த்து கண்டிப்பாக கெயில் சிரித்திருக்க வேண்டும்.
இன்றையப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியினர் தங்கள் ஆர்வம், திறமை மற்றும் போராட்டக் குணத்தால் இந்த வெற்றியைச் சுவைத்தனர் என்றால் அது மிகையாகாது.
இந்த அணியினருக்கு பத்திரிக்கை.காம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.