ஐஐஎம்-அஹமதாபாத்தில் மல்லையாவின் கடன் மற்றும் நிலுவைத்தொகை ஒரு  வழக்காய்வு (case-study) ஆகவுள்ளது.
22-1434956158-vijay-mallya-flight-600
ஒருக் காலத்தில்,  விஜய் மல்லையாவை  ஒரு விரிவுரை வழங்க இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்), கொல்கத்தாவிற்கு அழைக்கப்பட்டார். ஆனால், இப்போது, அவரது தற்போதைய கடன் துயரங்கள் குறித்து வழக்காய்வு செய்ய ஐஐஎம்-அஹமதாபாத் மாணவர்கள் ஒரு ஆய்வுப் தலைப்பாக எடுத்துக் கொள்ளவுள்ளனர்.   ‘மது தொழிலதிபரின்   கடன் படுதோல்வி’யை வணிகப் பள்ளி மாணவர்கள் ஒரு வழக்காய்வு எடுத்துக் கொள்வது குறித்து ஐஐஎம்- அஹமதாபாத் பேராசிரியர்கள் கடுமையாக  யோசித்து வருகின்றார்கள்.
IIM-A
ஐஐஎம்-தகவல்கள் படி, வணிகப் பள்ளியில் ,முதுகலை  நிதி மற்றும் கணக்குப் பிரிவு மாணவர்கள், ₹9000 கடன் மற்றும் வட்டியினைக் கட்டாமல் கால தாமதம் செய்துவிட்டு, தற்பொழுது நாட்டைவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படும் விஜய் மல்லையா வழக்கில் உள்ள அம்சங்கள் குறித்தும், படிக்க வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே, மல்லையாவின் கடன் வழக்கு குறித்து வகுப்பறையில் மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களால் விவாதிக்கப்பட்டது. எனவே, அது நிச்சயமாக, நெறிமுறைகள், கூட்டக நிறுவன ஆளுகை மற்றும் வர்த்த மேலாண்மை போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்க ஒரு வழக்காய்வாக இருக்க முடியும் என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
IIM AHMDBAD
இது போன்ற சந்தர்ப்பங்களில் பங்குதாரர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் எனவும் பிரீமியம் வணிகப் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் படும். எனினும், அது எவ்வளவு விரிவாக மல்லையா வழக்கு கற்று கொடுக்கப் பட வேண்டும் என்பது மீது முடிவு எட்டப்பட வில்லை.
 
வங்கிகள் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் இடமிருந்து கடன் மற்றும் வட்டி ₹9,000 கோடியை   திரும்பப் பெற முயன்று வருகின்றனர்.
14751709_Vijay_Mallya_news
ஐஐஎம்-அஹமதாபாத் தவிர, மல்லையாவின் வழக்கு ஐ.ஐ.எம்- லக்னோ, ஐஐஎம் பெங்களூருவில் மற்றும் ஐஐஎம்- இந்தூர் உள்ளிட்ட பிற ஐ.ஐ.எம்-களிலும் கற்றுக் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கு முன்னர் கூட, சத்யம் ஊழல் தலைப்புச் செய்தியாக உலவிய பின்,  சில ஐஐஎம் களில், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ‘ராமலிங்க ராஜூவின் வழக்கு தொடர்பாக விவாதித்கப் பட்டது நினைவுக்கூரத் தக்கது.