இந்தியப் பாதிரியார் டாம் கடத்தப் பட்டு , துன்புறுத்தப் பட்டுவருகின்றார். அவர் வெள்ளியன்று சிலுவையில் அறையப்படுவார் ” என வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 4 ம் தேதி நான்கு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் முதியோர் இல்லத்தை கண்மூடித்தனமாகத் தாக்கியதில், நான்கு இந்திய நர்ஸ்கள் உட்பட பதினைந்து பேர் கொல்லப் பட்டனர்,
இச்சம்பவம் குறித்து ஐ எஸ் ஐ எஸ் எந்தச் செய்தியும் வெளியிடவில்லை. வேறு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. ஆனால், ஐ எஸ் ஐ எஸ் யிடமிருந்தே தங்களுக்கு செய்தி வந்ததாக பல கிறிஸ்துவ அமைப்புகள் உறுதிசெய்துள்ளன.
இந்நிலையில், இந்தச் சித்ரவதைச் செய்தி தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த கிறிஸ்துவக் குழுவின் முகனூல் பக்கத்தில் வெளியானது. அதில் “ சலிசியன் பாதிரியார் டாம் கடத்தப் பட்டு , துன்புறுத்தப் பட்டுவருகின்றார். அவரை வெள்ளியன்று சிலுவையில் அறையப்படுவார் என தகவல் அளிக்கப் பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
ஏமனில் உள்ள ISIS சிறையில் இருக்கும் ஒரு இந்திய கத்தோலிக்க பாதிரியாரை புனிதவெள்ளியன்று சிலுவையில் அறையப் போவதாக ISIS அறிவித்துள்ளது. நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, மார்ச் 4 ம் தேதி, ஒரு முதியோர் இல்லத்தை தாக்கியபோது பாதரியார் டாம் உசுனாளிள் அவர்களை பிணைக்கைதியாக கடத்திச் சென்றனர். அவரை சிலுவையில் அறையக் கூடும் என்று கூறுகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த பாதரியார் டாம் உசுனாளிள் பணியாற்றும் பெங்களுர் ஆலய நிர்வாகத்தினர் இந்தச் செய்தியை வெறும் வதந்தி என மறுத்துள்ளனர். பாதரியார் டாம் உசுனாளிள் எங்கிருக்கின்றார் எனும் தகவல் தங்களிடம் இல்லை என்றும், அவரை யார் கடத்திச் சென்றார்கள், எதற்காகச் கடத்தினார்கள் என்கிறத் தகவல் தெரியவில்லை என்றும் கூறினர்.
“ கடந்த மார்ச் 4 ம் தேதி நான்கு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் தெரசா மிஷனரி நடத்தும் முதியோர் இல்லத்தை கண்மூடித்தனமாகத் தாக்கியதில், நான்கு இந்திய நர்ஸ்கள் உட்பட பதினைந்து பேர் கொல்லப்பட்டனர். அப்பொழுது இந்தியாவைச் சேர்ந்த பாதரியார் டாம் உசுனாளிளைக் கடத்தி சென்றுவிட்டனர் “எனக் கூறினார் முதியோர் இல்லக் காவலாளி.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதுகுறித்து கூறுகையில் “ஜீபௌடி(Djibouti)யில் உள்ள அமைச்சகத்தின் முகாம் அலுவலகம், பாதிரியார் டாம் உசுனாளிள் இருக்கும் இடம் குறித்து அறிந்துக் கொள்ளவும், அவரை பத்திரமாக மீட்பது குறித்தும் உரிய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.