mgk
மனித நேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து மனித நேய ஜனநாயக கட்சியை தொடங்கிய தமிமுன் அன்சாரி கொட்டிவாக்கத்தில் இன்று ( 26.3.2016) அரசியல் மறுமலர்ச்சி மாநாடு நடத்துகிறார். அங்குள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு வரும் அனைவரையும் பொருளாளர் ஆரூண்ரசீது வரவேற்கிறார்.
இம்மாநாட்டில் வக்பு வாரிய சோமன் தமிழ் மகன் உசேன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, பார்வர்டு பிளாக் கதிரவன், காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான், மனித நேய ஜனநாயக கட்சியின் பெங்களூர் தலைவர் முக்தார் அகமது உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.