
மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘மன் கீ பாத்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றுவது வழக்கம். இந்த நிலையில் 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகளின்படி மோடி வானொலியில் உரையாற்றுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
வழக்கமான இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்ககோரி தேர்தல் கமிஷனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நாடியது. இதற்கு தேர்தல் கமிஷன் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
5 மாநில தேர்தலில் எவ்விதத்திலும் செல்வாக்கை வெளிப்படுத்தாமலும், வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலும் நிகழ்ச்சி இருக்க வேண்டும். இது தொடர் நிகழ்ச்சி என்பதால் கடந்த காலத்தை போலவே இப்போதும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel