சென்னை: வாரத்தில் 5 நாட்கள்தான் வேலை, இரண்டு நாள் விடுமுறை என வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர். இதனால், இன்று வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஞாயிற தோறும் விடுமுறை உள்ளது. ஆனால், அவை போதாது என கூறி, வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அதற்கு பதிலாக வார நாட்களில் தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றவோம் என வங்கி சங்கங்கள் தெரிவித்தன
இதை வலியுறுத்தி இன்று இன்று (ஜனவரி 27) நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.. வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்தக் கோரி இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக கடந்த 23ந்தி மத்திய தொழிலாளர் ஆணையருடன் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான ‘யுனைடெட் போரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ்’ இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணியா‘ற்றும் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால் பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
ஆனால் தனியார் வங்கிகளான மெர்க்கன்டை வங்கி, HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.
[youtube-feed feed=1]