accident
துபாயில் இருந்து ரஷ்யா சென்ற விமானம், ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 6 விமான ஊழியர்கள், 55 பயணிகள் உள்பட 61 பேர் பலியாகியுள்ளனர். ரோஸ்டவ்-ஆன் நகரில் உள்ள டான் விமான நிலையத்தில் போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்த ஜெட் விமானம், தரையிறங்கும் போது 50-100 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கியுள்ளதாக பிளய் துபாய் இதனை உறுதி செய்துள்ளது.
முதல் முறையாகத் தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. அதனால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்ததால், ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகித் தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு மண்டல தலைமை அதிகாரி இகோர் ஓடர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெரும்பாலும் ரோஸ்டவ்-ஆன் பகுதிகளில் வசிப்பவர்கள். இதில், வெளிநாட்டைச் சேர்ந்த சிலரும் இருந்திருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.