டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டிசம்பர் 27ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிகார் தேர்​தலில் காங்​கிரஸ் தோல்விக்கு பிறகு நடை​பெறும் கட்சி​யின் முதல் செயற்​குழு கூட்​டம் இது​வாகும். மேலும் தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்​கம் ஆகிய மாநிலங்கள் 2026-ல் தேர்​தலை எதிர்​கொள்​ள​விருக்​கும் நிலையில் இக்​கூட்​டத்​தில் இதற்​கான வியூ​கம் வகுக்​கப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

நாடாளுமன்றத்தில் மகாந்தி காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர், பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்வி, 2026 சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து , வரும்   27-ம் தேதி  கூடும் காங்​கிரஸ் கட்​சி​யின்  உயர் அதி​கார அமைப்​பான செயற்​குழு​வின் கூட்​டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக  காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில்  அடுத்தாண்டு நடைபெற்ற ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தேர்தல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். மேலும், பீகாரில் என்ன தவறு நடந்தது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

நவம்பர் 14 அன்று பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பின் முதல் கூட்டம் இதுவாகும்‘. அந்தத் தேர்தலில் காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ-வால் படுதோல்வி அடைந்தன.

மேலும்,   ஒரு வருடத்திற்கு முன்பு பெலகாவியில் அறிவிக்கப்பட்ட கட்சியின் அமைப்பு மறுசீரமைப்புத் திட்டம் குறித்தும் மதிப்பீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கட்சியின் நிறுவன தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, டிசம்பர் 27 அன்று காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால், அஜய் மாக்கன் மற்றும் பிற தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]