சென்னை: தமிழ்நாட்டின்  மின் சிக்கனத்தை கடைபிடிக்க  பொதுமக்களக்கு  தமிழ்நாடு மின்சார வாரியம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவையை கணக்கில்கொண்டு, தமிழ்நாடு சு மின்சார வாரியம் பொதுமக்களிடம் மின்சிக்கனத்தை  கடைபிடிக்கும் வகையில், விழிப்புணர் ஏற்படுத்தும் நோக்கில் சில வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது. மின் நுகா்வோா்களுக்கு 10 அறிவுறுத்தல்களை  வழங்கியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

1. தேவையில்லாத நேரங்களில் மின்சாதனங்களை அணைத்து விட வேண்டும்.

2. மின் விளக்குகளுக்கு பதிலாக எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம்.

3. இயற்கை வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

4. மின்விசிறி, ஏசி, பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

5. பயன்பாடு இல்லாத மின்சாதனங்களை பிளக்-அவுட் செய்ய வேண்டும்.

6. குளிா்சாதனத்தின் பயன்பாட்டை முடிந்த வரை குறைக்க வேண்டும். உபயோகிக்கும் பட்சத்தில் 24 முதல்–26 டிகிரி செல்சியஸ் அளவிலேயே வைத்திருக்க வேண்டும்.

7. மின்சாரத்தை அதிகம் சேமிக்கும் சாதனங்களை தோ்வு செய்து உபயோகிக்க வேண்டும்.

8. சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த முன்வர வேண்டும்.

9. ஒரே அறையில் அதிக மின்சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல் இருக்கலாம்.

10.மின் சிக்கனம் குறித்து குடும்பத்தினருக்கும் மாணவா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

இவ்வறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]