சென்னை : தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு  இலவச மடிக்கணினி வழங்கப்படும் திடடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 19ந்தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஸ் டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் வழங்கப்படும் என கூறிய நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

கடநத அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் கல்வித்திறனை வளர்ப்பதாக இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது பெரும் வரவேற்பை அளித்தது.  ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து,  பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதுபோல, மேம்படுத்தப்பட்ட தரத்தில் கணினி மாணவர்களுக்கும் டேப் (TAB) ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி ஆசிரியர்களுக்கு டேப் வழங்கப்பட்டு விட்டது.

இதையடுத்து,   மாணவர்களுக்கு லேப்டாப் எனப்படும் மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து வரும் 19ந்தேதி முதல்வர் ஸ்டாலின் இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக,   ல் திருச்சி மாவட்டம், டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள முடுக்குப்பட்டி பகுதியில், திமுக சார்பில் ”என் வாக்குச்சாவடி, என் உரிமை” பிரச்சாரம் தொடங்கியது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, . மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் மடிக்கணினி வழங்கப்படும். இதற்கான டெண்டர் கோரப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்காக திட்டங்களை செயல்படுத்தவில்லை, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]