சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட யார் அந்த சார்? புகழ் திமுக நிர்வாகி ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் என்ற பிரியாணி கடை வியாபாரியான திமுக அனுதாபி, இருவரையும் மிரட்டி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, தன்னை ஞானசேகரன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், யாருடனோ போன் மூலம் சார் சார் என பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து எதிர்க்கட்சியான அதிமுக சார்பில், யார் அந்த சார் என கேள்வி எழுப்பி போராட்டம் நடைபெற்றது. மேலும் மாநிலம் முழுவதும் யார் அந்த சார் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், மாணவியின் புகாரின் அடிப்படையில், பல்கலை வளாகத்திலேயே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர்மீது குண்டர் சண்டம் போடப்பட்டது. அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றமும், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு குறியது.
இந்த நிலையில், ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
குண்டர் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி ஞானசேகரன் தாயார் கங்காதேவி மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!
[youtube-feed feed=1]