திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அமர்வு அனுமதி மறுத்து விட்டது. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் அமைதியாக இருங்கள் என்று கூறியது.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இத்த உத்தரவு மதிக்கப்படாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை செய்த நீதிபதி, அடுத்த விசாரணைக்கு டிஜிபி, மாவட்ட ஆட்சியர் காணொளி காட்சி மூலம் ஆஜராக உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதி மன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக்கண்ணன் சார்பில் வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் சில மனுக்களும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த பிரச்சினையில், உண்மையிலேயே தீர்வு காண வேண்டும் என்றால் அமைதியாக இருங்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்திற்கு அருகே தர்கா உள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் இல்லை. அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே 73 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அப்போது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் 1994-ல் இருந்து பிரச்சினை ஏற்பட்டதால் தீபம் ஏற்றுவது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 2014-ம் ஆண்டு விரிவான தீர்ப்புகள் வந்துள்ளதாக வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் “திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் “மலை உச்சியில் உள்ளது சர்வே தூண் தான். மலையில் உள்ள நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானது என்றும் மற்றவை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்
[youtube-feed feed=1]