அமராவதி: ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்துக்கு குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்

ஆந்திரப் பிரதேசத்தில் சிந்தூரு-பத்ராசலம் சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 35 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். துளசிபகலு கிராமத்திற்கு அருகே அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 35 பேரில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்த விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்து குறித்து அதிகாரிகளிடம் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனையளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவும் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]