மதுரை: தேனியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., கவுன்சிலர் சங்கர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கிய சொத்துகள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடி நகராட்சி தலைவராக இருப்பவர் ராஜராஜேஸ்வரி. 29வது வார்டு திமுக கவுன்சிலரான சங்கர் என்பவர் கடந்த ஏழு மாதங்களில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை ஏலக்காய் வியாபாரம் செய்து, இதன் மூலம் 70 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார் கிடைத்தது. இதனடிப்படையில், போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோன் மற்றும் அவரது வீட்டில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் சோதனை மேற்கொண்டனர்.
போடி இரட்டை வாய்க்கால் பகுதியில், சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோன் மற்
றும் அவரது வீட்டில், ஐந்து நாட்களாக, வருமான வரித்துறை அதிகாரி களும்; சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சங்கர் குடும்பத்தார் வரி ஏய்ப்பு செய்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கி இருப்பது தெரியவருகிறது. அது குறித்து பட்டியல் தயாரித்து வருகிறோம்.
‘மேலும், சங்கரின் மகன் லோகேஷ், வரி ஏய்ப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளார். தந்தையுடன் சேர்ந்து, வட மாநிலங்களுக்கு, 3,000 கிலோ ஏலக்காய் அனுப்பி, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து விசாரித் து வருகிறோம்’ என்றனர்.
[youtube-feed feed=1]