சென்னை: 2026 சட்ட மன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 14ந்தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம் என பாமக தலைவர் அன்புமணி அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்தமுறை தமிழ்நாட்டில், 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி 4முனை போட்டி நிலவும் சூழலில் முக்கிய கட்சிகளின் வாக்கு சதவிகிதம் குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால் கடும் போட்டி நிலவி வருகிறது. . இதைத்தொடர்ந்து பல கட்சிகள் விருப்பமனு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி, பாமக தரப்பிலும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட டிசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
தமிழ்நாடு, புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுவைவ ரும் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் பெறலாம். விருப்ப மனுவை டிசம்பர் 20 மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]