சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் பெறுவது தொடர்பான தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அரசு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈட்டி விடுப்பு பலன் சலுகை அரசு ஊழியர்களுக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இனி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலனை பெற முடியும்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்திய நிலையில் உலக பொருளாதாரமே தள்ளாடியது. இந்த காலக்கட்டத்தில், இந்தியஅரசு மட்டுமின்றி, , தமிழ்நாடும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. அந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுகுக வழங்கி வந்த ஈட்டிய விடுப்பு சரண் பலன் உள்பட பல சலுகைகளை நிறுத்தியது. பின்னர்., கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து, பொருளாதாரம் இயல்புநிலை திரும்பியதும சில சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டது.
ஆனால், அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட இந்த விடுப்பு சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக அரசுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ச்சியாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரிம் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈட்டி விடுப்பு பலனை பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அற்போதுஅதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் யாரெல்லாம் ஈட்டிய விடுப்பு பணப்பலனை எப்படி பெறலாம் என்ற விளக்கமும் அரசாணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிட்ட அசாரணையின்பே, அக்டோபா் 1 ஆம் தேதி முதல் ஆண்டுக்கு 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம். அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களுக்குள் பணியில் சோ்ந்தவா்கள் அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பணியில் சோ்ந்தவா்கள் 2026 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்தும் இந்த சலுகையை பெறலாம். அதுபோல, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியில் சோ்ந்தவா்கள் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்தும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் பணியில் சோ்ந்தவா்கள் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெற முடியும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்து தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை‘, அரசாணையின்படி, 26.4.2020 அன்று அதற்கு முன்பு பணியில் சோ்ந்தவா்களும் மேற்கண்டவாறு குறிப்பிட்ட காலக் கட்டத்திலேயே ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்கள் பெறலாம்.
அகவிலைப்படி உயர்வு
அண்மையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியது. 55 விழுக்காடு அகவிலைப்படி கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி 58 விழுக்காடு கொடுக்கப்படும் என்றும் முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விடுப்பு சரண் பணப்பலன் தொடர்பான இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.