சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிச.8ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்றது. இதில், ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும்,2026 சட்டப்பேரவைத் தேர்தல். எஸ்ஐஆர் நிலவரம், வெற்றிவாய்ப்பு, அரசு திட்டங்கள் மக்களை சென்றடைகிறது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில பேசிய ஸ்டாலின் டிச. 11 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்ததாலும் அதன்பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு திமுக தொண்டர்கள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால் அவர்களின் பெயர்களைச் சேர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Patrikai.com official YouTube Channel