சென்னை: திமுக அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில், அரசு பணிக்கு ரூ.. 35 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, அமலாக்கத்துறை  தமிழ்நாடு டிஜிபிக்கு எழுதிய கடிதம் விவகாரம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மேலும் ரூ.1000 கோடி ஊழல் என இரண்டாவது கடிதமும் எழுதி உள்ளது. இந்த கடிதம் வெளியாது குறித்து,  இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான உள்ளாட்சி  துறையில் நடந்த ஒரு பெரிய முறைகேடு குறித்து , நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத்துறை இரண்டு கடிதங்களை எழுதி உள்ளது.   ஏற்கனவே கடந்த அக்டோபர் 27 அன்று, உள்ளாட்சித் துறையில் நடந்த பணிக்காகப் பணம் மோசடி குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, அமலாக்கத்துறை, காவல்துறை டிஜிபி-க்கு கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடல் அதிகாரிகள் போன்ற பதவிகளைப் பெற ஒரு நபருக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது கடிதமும் எழுதியுள்ளது. அதில், மேலும் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த முறைகேடு குறித்து தமிழ்நாடு அரசு எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல், இந்த ரகசிய கடிதம் எப்படி  லீக்கானது குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, திருச்​சியை சேர்ந்த வழக்​கறிஞர் பரஞ்​சோ​தி (அதிமுக)  உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில்  மனு தாக்கல் செய்திருந்தார். தனது மனு​வில் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை அனுப்​பிய ரகசிய கடிதத்​தின் நகலை இணைத்​து, அந்த கடிதத்​தின் அடிப்​படை​யில் வழக்கு பதிவு செய்​யக் கோரி​யிருந்​தார்.

இந்த மனு நீதிபதி எஸ்​.மதி முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், அமலாக்கத் துறை​யின் ரகசிய கடிதம் வெளி​யான விவ​காரத்​தில் மத்​திய, மாநில அரசு அதி​காரி​கள், வழக்​கறிஞர்​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு முதல்​கட்ட விசா​ரணை தொடங்​கப்​பட்​டுள்​ளது என தெரிவிக்​கப்​பட்​டது.

இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், அமலாக்​கத்​துறை எழு​திய கடிதம் வெளி​யான விவ​காரம் குறித்து சிபிசிஐடி வி​சா​ரிக்க டிஜிபி (பொறுப்​பு) வெங்​கட​ராமன்​ உத்​த​ரவிட்​டுள்​ளார்​.‘

கே.என் நேரு துறையில் மேலும் ரூ1000 கோடி ஊழல்? தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை 2-வது கடிதம்

அமைச்சர் நேருவின்துறையான,  தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் டெண்டர்களை கையாளுவதன் மூலம் நடந்த பெரிய முறைகேடுகளை சுட்டிக்காட்டியுள்ள அமலாக்கத்துறை, இந்த டெண்டர் மூலம் குறைந்தபட்சம் ரூ. 1,020 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.

இதில் கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை மேற்கோள் காட்டியுள்ளது.

இந்த ஊழல் குறித்து தமிழ்நாடு காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்கக் கோரி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2)-ன் கீழ், 258 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தை டிசம்பர் 3 அன்று மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு (DVAC) அனுப்பியுள்ளது. இது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்க இது உதவும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான உள்ளாட்சி  துறையில் நடந்த ஒரு பெரிய முறைகேட்டைக் குறித்து தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத்துறை எழுதிய இரண்டாவது கடிதம் இதுவாகும்.

ஏற்கனவே கடந்த அக்டோபர் 27 அன்று, உள்ளாட்சித் துறையில் நடந்த பணிக்காகப் பணம் மோசடி குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, அமலாக்கத்துறை, காவல்துறை டிஜிபி-க்கு கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடல் அதிகாரிகள் போன்ற பதவிகளைப் பெற ஒரு நபருக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

ஏற்கனவே இருக்கும் ஒரு விசாரணை அமைப்பால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாவிட்டால், பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறை ஒருதலைப்பட்சமாகத் தொடங்க முடியாது. இருப்பினும், பண மோசடி குற்ற சட்ட பிரிவு 66(2) ஆனது, மற்ற ஏஜென்சிகளுடன் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அதன்மூலம் அமலாக்கத்துறை தனது பணமோசடி விசாரணையைத் தொடங்க வழிவகுக்கும் இந்த மூலம் அடிப்படை குற்றங்களின் கீழ் எப்.ஐ.ஆா பதிவு செய்யுமாறு அவர்களை வலியுறுத்தவும் வழி செய்தது.

உள்ளாட்சித் துறையின் பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. டெண்டர் முறைகேடு செய்யப்பட்டு அல்லது முன்பே தீர்மானிக்கப்பட்ட நிலையில், அந்த ஒப்பந்ததாரர்கள் பயனாளிகள் ஆவார்கள் என்றும், ரெய்டின் போது நேருவின் உதவியாளர்களின் தொலைபேசிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி யுள்ளது.

உள்ளாட்சியில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து ‘கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கூடுதலாக, துறையில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள்கூட ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் வசூலித்து அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறியுள்ளர். அமைச்சரின் உதவியாளர்களின் தொலைபேசிகளிலிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் செய்திகள், உரையாடல்கள் அல்லது கணக்கீட்டுத் தாள்களின் அடிப்படையில், ரூ. 1,020 கோடி மொத்த லஞ்சப் பணம் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக அமலாக்கத்துறை பல குறிப்பிட்ட நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆதாரம் அரசாங்க ஒப்பந்தங்களில் நடக்கும் ஒரு பெரிய முறைகேட்டின் சின்ன புள்ளி மட்டுமே என்று கூறியுள்ள அமலாக்கத்துறை, சமூகக் கழிவறைகள், துப்புரவுத் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், துப்புரவாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள், நீர்/ஏரிப் பணிகள் போன்ற கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

லஞ்சப் பணம் பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளால் திட்ட அனுமதி மற்றும் பில் பாஸ் செய்யும் போது வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்த மதிப்பில் 20-25% ஆகும். இந்த லஞ்சப் பணம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஹவாலா நெட்வொர்க் மூலம் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் உரிமையாளராக உள்ள ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (True Value Homes) சம்பந்தப்பட்ட சி.பி.ஐ வங்கி மோசடி தொடர்பான பண மோசடி வழக்கை விசாரிக்கும் போது, ஏப்ரல் மாதம் நேரு மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்களில் இந்த ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான, சி.பி.ஐ வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதால் பண மோசடி வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது. இதனால் கண்டறியப்பட்ட ஆதாரங்கள் மற்ற வழக்குகளுக்கு மாற்றப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

ஆடம்பரமான வாழ்க்கை முறை, தனிப்பட்ட சொத்துக்கள் உருவாக்கம் மற்றும் அரசியல் செலவினங்களுக்காக பொது நிதி சுரண்டப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத் துறை, விஜய் மதன்லால் சௌத்ரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஊழலை விசாரிக்க வழக்குகள் பதிவு செய்யுமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது,

இதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருப்பது, லஞ்சப் பணம் வசூலிப்பதில் (குற்றத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை உருவாக்குவதில்) குற்றவாளிக்குத் தெரிந்தே உதவுவதற்குச் சமம் என்று மாநில காவல்துறைக்குத் தெளிவான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பிரிவு 66(2)-ஐ பயன்படுத்தி தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதுவது இது முதல் முறை அல்ல.

ஆற்றுமணல் கொள்ளை வழக்கில், அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு இடையேயான கூட்டுச் சதியை விசாரிக்க எப்.ஐ.ஆர் பதி செய்ய கோரி, ஆற்று மணல் சுரங்க முறைகேடு தொடர்பான ஆதாரங்களை இணைத்து, தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.

கடந்த 2015-16-ல் வீட்டு வசதித் திட்டத்திற்கான ஒப்புதல்களைப் பெறுவதற்காக முன்னாள் அதிமுக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்களுக்கு ஷிரீராம் பிராப்பர்டீஸ் நிறுவனம் ரூ. 27.9 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கு விசாரணையின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டு அமலக்கத்துறை, கடிதம் எழுதியது.

இதன் அடிப்படையில், மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரத்தநாடு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிராக இரண்டு எப்.ஐ.ஆர்-களைப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடங்கி முடித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் நகராட்சி துறையில் ரூ.888 கோடி பணி நியமன ஊழல் புகார்! ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தகவல்…