சென்னை: தமிழ்நாட்டில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ள காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி  தவெக தலைவர் விஜய் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்று சொல்லியிருக்கிறார் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக தலைவர் விஜய்யுடன், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை  டிச. 5  நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு பற்றி தெரியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் அறிவாலயம் சென்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிவிட்டு வந்தது. அப்போது காங்கிரஸ் தரப்பில், அதிக தொகுதிகள் கேட்டதாகவும், மேலும் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கேட்டதாகவும், அதற்கு திமுக தரப்பில் முறையான பதில் கிடைக்கவில்லை என தகவல்கள் பரவி வந்தது.

இந்த பரபரப்பான சூழநிலைல், காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவரும் பிரவீன், தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளக்ரளிடம் பேசிய  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை   “விஜய்யுடன் பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு பற்றி எனக்குத் தெரியாது, விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை, பேசவும் சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

மேலும்,  திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். இந்தியா கூட்டணி பலமாக உள்ளது, எங்களுடைய தலைமை என்ன சொல்கிறதோ அதைதான் செய்கிறோம் என்றவர்,

செய்தியாளரின் தொடர் கேள்வியால்,. பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சென்று சந்தித்தற்கு ஏதேனும் புகைப்படங்கள் இருக்கிறதா? அப்படி கேள்வி எழுப்பியவர், அப்படி  அவர் சந்தித்திருந்தால் அது தலைமையின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அவர்மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து கட்சி  தலைமை அதுகுறித்து முடிவு செய்யும்” என்றார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை இல்லாத நிலையில், பல தலைவர்கள், தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.  ஆனால், ஆட்சியாளர்களின் ஆதரவை நம்பி உள்ள  சில தலைவர்களே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர வேண்டும் என்று விரும்புவதாக கூறப்படும் நிலையில், பிரவீன், விஜய் சந்திப்பு, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவராக இருந்த சசி தரூரின் இடத்தில் இப்போது பிரவீன் சக்கரவர்த்தி இருக்கிறார். கடந்த முறை, பிரவீனை திமுக உதவியுடன் ராஜ்ய சபாவுக்கு அனுப்ப திட்டமிட்டது காங்கிரஸ் தலைமை திட்டமிட்டது. ஆனால், அதற்கு இசைவளிக்க  திமுக தலைமை மறுத்து விட்டது. இதனால் திமுக மீது அதிருப்தியில் பிரவீன் இருந்து வருகிறார். மேலும்,  திமுக. இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர். அதனால் அவரது சந்திப்பு கட்சி தலைவர்களிடையே சலசலப்பு ஏற்படுத்தி உள்ளதுடன், கூட்டணியிலும் புகைச்சலை உருவாக்கி உள்ளது.

பிரவீன்   கரூர் கூட்ட நெரிசல்  சம்பவத்தின்போது, விஜய் உடன் போனில் பேசியது குறிப்பிடத்தங்ககது.