டெல்லி: நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கமிட்டு திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

மதசார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு, இந்து மதத்துக்கு எதிரான செயல்களியே ஈடுபட்டு வருகிறது. அதன் தாக்கம் திரும்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை நிறைவேற்றுவதற்கு பதிலாக, காவல்துறையினரை குவித்து திட்டமிட்டு பதற்றத்தை உருவாக்கியது. பின்னர், இதை காரணம் காட்டி தீபம் ஏற்ற தடை விதித்துள்ளது. இது இந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தென்மாவட்ட மக்களிடையே அரசு மீதும், காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர். அதை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில், திமுக எம்.பி.க்கள் இன்று கோஷம் எழுப்பினர். திமுக மக்களவை உறுப்பினர்களின் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.