மும்பை: இந்தியன் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.25% குறைப்பதாக அறிவித்து உள்ளது என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பு 7.3% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும்    ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும், வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என்று   கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர் இந்த முறை மேலும். 0.25 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.  அதாவது ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக அறிவித்துள்ளது. இதன் காலமாக இஎம்ஐ கடன்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரெப்போ விகிதம் 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் குறைக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரியில்  0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் (ஏப்ரல்) அது மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 0.50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக  இருந்து வருகிறது.  கடந்த  ஆகஸ்ட் மாதம், மற்றும் நவம்பர்  நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும் வகையில், ,  டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெற்ற மூன்று நாள் கூட்டத்தின் முடிவின்படி, வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

அதாவது,  வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம் குறைந்துள்ளதன் காரணமாக, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் கணிசமாக குறைந்துவிட்டது என்று MPC குழு கவனித்தது. இந்த அளவீடு தொடர்ந்து குறையும் என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

மெலும்,  நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7.3% ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மூன்றாம் காலாண்டு ஜிடிபி 7%, நான்காம் காலாண்டு 6.5% என்று கணித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டு 6.7%, இரண்டாம் காலாண்டு 6.8% ஆக இருக்கும் என கணித்துள்ளது.

டிசம்பரில் 5 பில்லியன் டாலர் அளவுக்கு மூன்று ஆண்டு டாலர்-ரூபாய் வாங்கி-விற்கும் ஸ்வாப் நடத்தப்படும் என்று தெரிவித்தவர், இந்த ஆண்டு நுகர்வோர் விலைவாசி (CPI) 2% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு  இருப்பதாகவும்,  இது முந்தைய மதிப்பீட்டைவிட 0.6% குறைவு என்றும் கூறினார்.