மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  தனி நீதிபதி மற்றும், இரு நீதிபதிகள் அமர்வு  அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு  இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்து, காவல்துறையை கொண்டு அடாவடி செய்த திமுக அரசு, இரவோடு இரவாக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதையடுத்து தீபம் ஏற்றும் தரப்பும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

திருப்பரங்குன்றம்  சிக்கந்தர் மலை அல்ல  அது முருகன் மலை என தொல்லியல் துறையின் ஆதாரங்கள் மற்றும்  ஆய்வுகளைக் கொண்டு ,  சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து,   இந்த ஆண்டு மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி கோரி இந்து அமைப்புகள் திமுக அரசின் அறநிலையத்துறையிடம் மனு கொடுத்த நிலையில், அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்தார். மேலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கும்படியும் உத்தரவிட்டார். அதன்படி தீபம் ஏற்ற சென்றவர்களை தடுத்த காவல்துறையினர், மேல்முறையீடு செய்யப்போவதாக கூறி  தீபம் ஏற்றம் விடாமல் மிரட்டி அனுப்பினர்.

‘தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தன

. இதேபோன்று மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை நிறுத்தி வைக்க கோரி ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், அமர்வு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய  மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,  தமிழ்நாடு அரசு, காவல்துறை ஆணையர், கலெக்டர் என அனைவரையும் கடுமையாக சாடியது.

தீபம் போடலாம், அரோகரா கோஷம் எழுப்பலாம், பாரத் மாதாகி ஜெய் என்று கூறலாம். ஆனால் காவலரை தாக்கினால் பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் என்று அரசு தரப்பில் கேள்வி முன் வைக்கப்பட்டது. நீதிபதி நியாயமானவர் என்பதில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகளிடம் ரவுத்திரம் பழக வேண்டாம் எனக் கூறிய நீதிபதி சுவாமிநாதன், வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் காணொளியில் கூட ஆஜராகவில்லை என்று கவலை தெரிவித்தார்.  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்பது தங்கள் நோக்கம் அல்ல என்றும் கூறினார்.
‘ தொடர்ந்து, ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி, மனுதாரரும் அவருடன் 10 பேரும் சேர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் உடனடியாக மாலை 6.30 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு தேவையான பாதுகாப்பை மதுரை மாநகர் காவல் ஆணையர் வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, தீபம் ஏற்பட்டதும் அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.  மேலும் மலை உச்சியில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முட்டுக்கட்டை போட்டது. மீண்டும் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்ற வந்தவர்களை மலை மீது ஏற விடாமல் காவல்துறையினர் அடாவடி செய்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த பாஜக தலைவர்கள் நயினார், எச்.ராஜா, எஸ்கே சூர்யான  மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் தொண்டர்களை கைது செய்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையில், உயர்நீதிமன்ற  உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை எதிர்த்து இந்து அமைப்புகள் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், , ‘தனி நீதிபதியின் உத்தரவால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவதை விட்டு விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற கேட்பது தான் பிரச்சனை’ என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ராம ரவிக்குமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று  நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்குமா? அல்லது உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்த சொல்லுமா? என்பது தெரியவரும். ஒட்டுமொத்தத்தில் திருப்பரங்குன்றம் இப்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.