டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதுமுதலே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினசரி ஒவ்வொரு புகார்களை கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இநத நிலையில்,  நாடாளுமன்ற வளாகத்தில்  முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைநகர் டெல்லியில் அதிகரித்து காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் நான்காம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், முகக்கவசம் அணிந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமையும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக புதன்கிழமையும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.