கோவை: நள்ளிரவில் காதலுடன் காரில் தனியாக இருந்த மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் என கருதப்படும் மூவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து காவல்துறை, குற்றவாளிகள் என கருதப்படும் குணா, சதீஷ், காளி ஆகியோர் படத்தை வெளியிட்டு உள்ளனர்.

கடந்த நவம்பா் 2-ஆம் தேதி அன்று கோவை விமான நிலையம் அருகே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் தனது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பிட்ட மாணவி அணிந்திருந்த துணிகள் காரில் கிடந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியை வன்புணர்வு செய்ததாக, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது சகோதரா் காளி (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.
பின்னர் அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா்களிடம் நவம்பா் 5-ஆம் தேதி விசாரணை நடத்திய கோவை ஜே.எம். 2 நீதிபதி அப்துல் ரகுமான் அவா்களை நவம்பா் 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். சிகிச்சைக்குப் பிறகு மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று அவா்களது நீதிமன்றக் காவலை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து மகளிா் கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கும்பத்ர் , அன்னூா் அருகேயுள்ள செரையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (55) என்ற ஆட்டு வியாபாரியின் கொலை வழக்கிலும் இவா்களுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சதீஷ், காளீஸ்வரன், குணா ஆகியோருக்கு எதிராக கோவை மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி முதற்கட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதில், முதல் எதிரியாக சதீஷ், இரண்டாவது எதிரியாக அவரது தம்பி காளி, மூன்றாவது எதிரியாக குணா ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா். இதனிடையே இவா்களது புகைப்படங்களை போலீஸாா் முதல்முறையாக வெளியிட்டனா்.
கோவையில் பயங்கரம்: காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! மனித தன்மையற்ற செயல் என முதல்வர் ஸ்டாலின் பதிவு…