மொபைல்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுவதை கட்டாயமாக்கிய உத்தரவை மத்திய அரசு இன்று (புதன்கிழமை) திரும்பப் பெற்றது.

‘சஞ்சார் சாத்தி’ செயலி மொபைல் போனின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தக்கூடியது என்றும் இது மக்களை கண்காணிக்க மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற்சி என்றும் செயலியை முன்கூட்டியே நிறுவியதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து பரவலான விமர்சனங்கள் எழுந்தன.

அதேவேளையில், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தங்கள் புதிய மொபைல் போன்களின் தயாரிப்பின் போதே இந்த செயலியை நிறுவ மறுப்பு தெரிவித்தன.

இதையடுத்து மொபைல்களில் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

இருந்ததுபோதும், சஞ்சார் சாத்தி செயலியை தானாக முன்வந்து பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

செயலிக்கான ஆதரவு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, முன் நிறுவலை கட்டாயமாக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.