மதுரை: 105 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது  இது மக்களிடையே பெரும் வரரவேற்பை பெற்றுள்ளது. இதை எதித்தது தாக்கல்  திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு  உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டது. .

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்  என உயர்நீதிமன்ற அளித்த உத்தரவை எதிர்த்து, திமுக அரசின் அறநிலையத்துறையின்  சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு  மனு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.  இதன் காரணமாக,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் 105 ஆண்டுக்குப் பிறகு இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது உறுதியாகி உள்ளது. இதற்கிடையில், மதுரையில் இந்துக்கள் குவிந்து வரும் நிலையில், மதுரை மட்டுமின்றி, திருப்பரங்குன்றம் கோவிலை சுற்றியும் பலத்த போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில்  உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் 27 இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அறநிலையத்துறையின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது உரிமையாகி உள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,3) நடைபெறுகிறது.  அறுபடை வீடுகளின் முதல் வீடான திருப்பரங்குன்றம் கந்தன் மலை  மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் விரும்பினர். ஆனால் அதற்கு அனுமதி மறுத்து வரும் தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.

திருப்பரங்குன்றம் , மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் 1920 ம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றப்படு தவிர்த்து மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும்,  இந்து முன்னணி அமைப்பு உள்பட இந்து அமைப்புகள்  நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது.  இதுதொடர்பாகஇ, .மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்’ என, குறிப்பிட்டார்.

இதனை விசாரித்த  உயர்நீதிமன்ற மதுரை அமர்வு  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்’ என உத்தரவிட்டு இருந்தார்.

இதனை எதிர்த்து  திமுக அரசின்,  திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தென்மாவட்டங்களை சேர்ந்த இந்துக்கள் மதுரை நோக்கி வரத் தொடங்கினர்.

இந்த நிலையில், ஆனால், இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவு அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு கோயிலில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று மாலையில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக  மிகவும் பதட்டமான சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதி உள்ளதால் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேற்று இரவு முதல் திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை பாதை பகுதிகளில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தீபத்திருநாளான இன்று  ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பான் நடக்காமல் தடுக்க காவல்துறை சார்பில் 27 இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் ஆர்ச், 16 கல் மண்டபம் மற்றும் பெரிய ரதவீதி மேலரத வீதி கீழ ரத வீதி திருப்பரங்குன்றம் கோவில் செல்லும் வழித்தடம், பழனி ஆண்டவர் கோவில், தர்கா பகுதி மற்றும் கோவில் பின்புறம் உள்ள படிக்கட்டு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு வசதிக்காக கோவில் வளாகம் கிரிவலப் பாதை பெரியதவிதி கீழ ரதவீதி மேலரத வீதி பதினாறுகள் மண்டபம் பழனி ஆண்டவர் கோவில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதியை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு… மதுரையில் பரபரப்பு…