டெல்லி: விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்  என புதிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களை தலைவருமான  சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி  அவையில் உரையாற்றினார்.

எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசுகையில் ,சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மரபில் சேர்ந்தவர் அல்லது அவரது பெயரையே கொண்டிருப்பவர். எனவே நீங்களும் அதே போன்று நடுநிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  மேலும் திமுக எம்.பி. சிவா உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்று பேசினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், மாநிலங்களவை  தலைவராக இன்று பொறுப்பேற்றிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

ராஜ்யசபா தலைவரா,  குடியரசு துணைத்தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக நடைபெறும் கூட்டத் தொடர் என்பதால் மாநிலங்களவையில், வரவேற்று பேசிய பிரதமர் மோடி,   விவசாயி மகன் சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று குடியரசு துணைத் தலைவராக உயர்ந்துள்ளார். நாட்டிற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துள்ளவர் என்று புகழாரம் சூட்டினார்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் மரியாதையைப் பேணுவார்கள் என்று நான் உங்களுக்கு இங்கே உறுதியளிக்கிறேன். எங்கள் தலைவர் ஒரு எளிய குடும்பத்திலிருந்து, ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர், மேலும் அவர் தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அரசியல்தான் இதற்கான ஒரு அம்சமாக இருந்து வருகிறது, ஆனால் அவரது முக்கிய நோக்கம் சமூக சேவையாக இருந்து வருகிறது. அவர் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். சமூக சேவையில் ஆர்வமுள்ள நம் அனைவருக்கும் அவர் ஒரு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்று மோடி கூறினார்.

மாநிலங்களை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் நடுநிலையுடன் அவை நடைபெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மரபில் சேர்ந்தவர் அல்லது அவரது பெயரையே கொண்டிருப்பவர். எனவே நீங்களும் அதே போன்று நடுநிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னோடி மாநிலங்களவைத் தலைவர் பதவியிலிருந்து முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் திடீரெனவும் வெளியேறியதைக் குறிப்பிட நான் கட்டாயப்படுத்தப்பட்டதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். முழு அவையின் பாதுகாவலராக இருக்கும் தலைவர், அரசாங்கத்தைப் போலவே எதிர்க்கட்சியையும் சேர்ந்தவர். அவருக்கு விடைபெறும் வாய்ப்பு சபைக்குக் கிடைக்காததில் நான் வருத்தமடைந்தேன். இருப்பினும், முழு எதிர்க்கட்சியின் சார்பாகவும் அவருக்கு மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன் என்றார்,.

திமுக எம்.பி. சிவா பேசுகையில்,  மாநிலங்களவை தலைவராக பணியை தொடங்கியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மாநிலங்களவையில் திருச்சி சிவா வாழ்த்துகளை தெரிவித்தார். அவையை மட்டுமல்லாமல் அவை உறுப்பினர்களையும் காக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது. தங்களது வருகையால் புதிய அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் குரல் மட்டுமல்ல சிறுபான்மையினரின் குரலுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அனைவரையும் சமமாக பார்க்கும் பாரம்பரியம், கலாச்சாரத்தில் சிறந்த தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளீர்கள். ஏற்கனவே தாங்கள் வகித்த அனைத்து பதவிகளிலுமே அனைவரும் சமம் என்ற கொள்கையை பிரதிபலித்தீர்கள். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மைய மண்டபத்தை ஏற்படுத்த அவைத் தலைவருக்கு திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கனி” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். சமன்செய்து சீர்தூக்கும் குறள்போல் அவையை நடுநிலையாக நடத்த திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்தார். எங்களுக்கும் பல கோரிக்கைள் உள்ளன, எங்கள் கோரிக்கைகள் கேட்கப்படும் வரை அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்போம் என தெரிவித்தார்.