டெல்லி: நாடாளுமற்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 1) தொடங்குகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது; 19 நாள்  நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு, நேற்று பிற்பகல், தலைநகர் டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கூட்டத்தொடரைச் சுமூகமாக நடத்துவது குறித்து ஆளும் தரப்பு எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை செய்தது.

குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 19 ஆம் தேதி வரை (விடுமுறை நாள்கள் நீங்கலாக) மொத்தம் 15 அமர்வுகளுக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 10 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேவேளையில், சமீபத்தில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன

மேலும்,  இந்த கூட்டத்தொடரில் எஸ்ஐஆர், டெல்லி செங்கோட்டை கார் வெடிப்புச் சம்பவம், வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்துக் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுத்து, ஒத்துழைப்பு வழங்கும்படி ஆளும் அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளது.