மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) புதிய சைபர் பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, WhatsApp, Telegram, Signal, Arattai, Snapchat, ShareChat, JioChat, Josh போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு கட்டாய SIM–binding (SIM இணைப்பு) விதி கொண்டு வந்துள்ளது.
இந்த ஆப்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவர்களின் மொபைலில் SIM கார்டு இருக்க வேண்டியது கட்டாயம். SIM இல்லாமல் ஆப்கள் இயங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

சில ஆப்களில், பயனர் முதல் முறையிலே OTP மூலம் லாகின் செய்துவிட்டால், பிறகு SIM கார்டை அகற்றினாலும், மாற்றினாலும், ஆப்கள் தொடர்ந்து வேலை செய்கின்றன. இதை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
SIM கார்டு இந்தியாவில் இல்லாவிட்டாலும், SIM கார்டு முடக்கப்பட்டாலும், அல்லது வேறு இடத்தில் இருந்தாலும், ஆப் இயங்குவதால், குற்றவாளிகள் தங்கள் இருப்பிடத்தை மறைத்து மோசடி செய்ய வாய்ப்பிருப்பப்பதாகக் கருதும் அரசு இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தற்போது விழித்துக்கொண்டுள்ளது.
2024 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட விதிகளில் சிறிய மாற்றங்கள் செய்துள்ள தொலைத்தொடர்புத் துறை புதிய விதிகள் குறித்து 2025 அக்டோபர் 22ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும், 120 நாளில் DoT-க்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
WhatsApp அல்லது Telegram போன்ற ஆப் இயங்க SIM கார்டு அதே போனில் இருக்க வேண்டும்.
SIM இல்லாமல், SIM மாற்றினாலும், SIM முடக்கினாலும் — ஆப் இயங்கக் கூடாது.
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்களில் இணைய வழி பயன்பாட்டு சேவையை பயன்படுத்துபவர்களுக்கு, 6 மணி நேரத்திற்கு ஒருமுறை ஆட்டோ-லாக்அவுட் செய்ய வேண்டும், மீண்டும் லாகின் செய்ய QR code ஸ்கேன் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது Telecommunications Act, 2023 மற்றும் Cybersecurity Rules படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது WhatsApp முதல் Swiggy வரை மொபைல் எண்ணை பயன்படுத்தி பயனரை அடையாளம் காணும் அனைத்து செயலிக்கும் இந்த விதி பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் மூலம் சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு உறுதியாக நம்புவது குறிப்பிடத்தக்கது.