கொழும்பு: தமிழ்நாட்டை நெருங்கி வரும் டிட்வா புயல்,  இலங்கையை சூறையாடியது. இதனால், அங்கு பல பகுதிகளில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த புயல் பாதிப்பு காரணமாகாக பலியானோர் எண்ணிக்கை 153ஆக உயர்ந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை வானிலை ஆய்வு மையம், அங்கு, இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று சற்று வேகமாக வீசும். புயல் எம்மை விட்டு முழுமையாக நீங்கியிருந்தாலும் ஏற்கனவே கிடைத்த மழை காரணமாக இன்னும் மூன்று நாட்களுக்கு ஆறுகளுக்கும் குளங்களுக்கும் நீர் வரத்து இருக்கும் என எச்சரித்துள்ளது.

டிட்வா புயல் உருவானது முதலே   இலங்கையில் கடந்த  ஒருவாரத்திற்கு மேலாக தொடர் மழை மற்றும்  கனமழை பெய்து வருகிறது.  இதனால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. டிட்வா புயல் காரணமாக  பல பகுதிகளில்  பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்திய அரசும் உதவிக்கரம் நீட்டி உள்ளது. மீட்பு பணியில் இந்திய ராணுவத்தினரும் ஈடுபட்டு உள்ளது.

டிட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அனுராதபுரத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் அங்குள்ள சிறைச்சாலைக்குள் புகுந்தது. இதன் காரணமாக, அந்த சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர். இலங்கை காவல் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கைதிகள் மார்பளவு நீரில் நடந்து சென்று படகில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது.

பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 191 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது என்று என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வானிலை  நிலவரம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று சற்று வேகமாக வீசும்.

டிட்வா புயல் புயல் எம்மை விட்டு முழுமையாக நீங்கியிருந்தாலும் ஏற்கனவே கிடைத்த மழை காரணமாக இன்னும் மூன்று நாட்களுக்கு ஆறுகளுக்கும் குளங்களுக்கும் நீர் வரத்து இருக்கும். குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியாவுக்கு நீர் வரத்து நாளை முதல் குறைவடையும். ஆனால் மன்னாருக்கான நீர்வரத்து எதிர்வரும் 03.12.2025 வரை இருக்கும். ஆகவே குளங்களின் வான் பாயும் பகுதிகளை அண்மித்த மற்றும் ஆற்றங்கரையோரங்களில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.

வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதி கடல்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆனாலும் இந்த புயலோடு தொடர்புடைய வானிலை சார்ந்து இனி அச்சப்பட எதுவுமில்லை. கடந்த சில நாட்களாக கோரத்தாண்டவமாடி, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்திய டிட்வா புயல் தற்போது இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறி தற்போது தமிழ்நாட்டின் காரைக்காலுக்கு மேற்கே நிலைகொண்டுள்ளது.

இதற்கிடையில், புயலின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவிகரம் நீட்டியுள்ளது.  இந்தியாவின் போர்க்கப்பல் இலங்கை சென்று, அங்கு உதவி புரிந்து வருகிறது. மீட்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளத. மேலும் இந்தியாவில் இருந்து உணவு பொருட்கள், மருந்துகளும் விமானஙகளில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகிளில் இந்திய ராணுவமும் களமிறிங்கி உள்ளது.  இந்தியாவைச் சேர்ந்த   NDRFவீரர்கள் 80பேர் அடங்கலான குழுவொன்று பல பொருட்களுடன் IL-76 IAF விமானத்தில் இலங்கை சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.