டெல்லி: அய்யப்ப பக்தர்கள் இனி விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்லலாம் என மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்கள் இருமுடியை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் முடிவை அறிவித்தார். இருமுடி என்பது சபரிமலை யாத்திரையில் பக்தர்கள் எடுத்துச் செல்லும் இரண்டு பெட்டிகளைக் கொண்ட ஒரு மூட்டை அல்லது முடிச்சு ஆகும்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் புகழ்பெற்றது. இந்த கோவிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு சென்று வருகின்றனர். விமானங்களில் ஐயப்ப பத்கர்கள் பயணிக்கும் போது இருமுடி கட்டிக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்த நிலையில், இருமுடி பைகளை அவர்கள் கொண்டு செல்ல மத்திய அரசின் தரப்பில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தமது எக்ஸ் வலை தள பதிவில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராமமோகன் நாயுடு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் , புனிதமான இருமுடியுடன் தொடர்புடைய உணர்வுகளை மதிக்கும்வகையில், விமானங்களில் அய்யப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்துச்செல்ல அனுமதிப்பது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பொருட்கள் வைக்கும் பகுதியில் எடுத்துச்செல்லாமல், பயணிகள் பகுதியில் தங்களுடனே வைத்துக்கொள்ளும் ‘கேபின் லக்கேஜ்’ ஆக கொண்டு செல்லலாம். இதன்மூலம் அவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் அதே வேளையில், பக்தர்களின் உணர்வுகளுக்கு முழு மதிப்பு அளிக்கப்படும். அனைத்து சமுதாயத்தினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.