இந்தோனேசியா அருகே சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதால், அண்டை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், நிலநடுக்கத்திற்குப் பிறகு, நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அருகே இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது, இந்தோனேசியாவின் சினாபாங்கிலிருந்து 58 கி.மீ வடமேற்கு தொலைவில் 27 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கடற்கரையில், ஃபூகெட்டிலிருந்து 661 கிலோமீட்டர் தொலைவில், சினாபாங் அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையப்பகுதி இருந்தது, ஆரம்ப ஆயத்தொலைவுகள் 2.68 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 95.96 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்தன.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இலங்கை வானிலை மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, இலங்கையில், கனமழை பெய்து வருகிறதுரு. இலங்கை முழுவதும் 170 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். 4 பேர் மாயம். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் இலங்கைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தோனேசியா மக்கள் வெளியே விரைந்தனர். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு,
நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. இதையடுத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.