சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்.ஏ பதவியை ராஜினாமால செய்த நிலையில், இன்று காலை பனையூரில் உள்ள , தவெக  அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய் முன்னிலையில்  தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிசெய்யும் விதமாக நேற்று விஜயை நேரில் சந்தித்து பேசினார் செங்கோட்டையன். சுமார் 3மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, கட்சி பதவி உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  இன்று காலை 10 மணியளவில் பனையூரில் உள்ள தவெக அலுவலத்திற்கு வந்த செங்கோட்டையனை , கட்சி தலைவர் விஜய் வரவேற்றார். பின்னர், அவரது ஆதரவாளர்களும் தவெக அலுவலகத்துக்கு வருகை தந்தனர்., அவர்களை தவெக நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்த்நது,   தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன்  தவெகவில் இணைந்தார்.

 செங்கோட்டையனுக்கு  தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கோட்டையன் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உட்பட 50க்கும் மேற்பட்டோரும் தவெகவில் இணைந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்ட செங்கோட்டையன், தற்போது தனது அரசியல் பயணத்தில் புதிய பாதையை தேர்ந்தெடுத்திருப்பது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.