சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட  மூத்த அதிமுக தலைவர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் .

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலமாக தனித்து செயல்பட்டு வந்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ், சசிகலா, டிடிவியுடன் சேர்ந்து, எடப்பாடியை விமர்சித்த நிலையில், அவரது  கட்சி உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் திமுகவில் இணைவார் என கூறப்பட்டது. அதே வேளையில், அவரை தவெக தரப்பும் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை கோட்டைக்கு வந்த செங்கோட்டையன், அங்கு சட்டமன்ற தலைவர் அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து அவர் எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அல்லது சசிகலா, ஒபிஎஸ், டிடிவியுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்வாரா என்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.  இது அதிமுக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து  நாளை அறிவிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

கலகலக்கும் அதிமுக: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய செங்கோட்டையன் முடிவு?