அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று கோவிலில் கொடி ஏற்றுதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொடியை பிரதமர் மோடி ஏற்றி, வணங்கினார். முன்னதாக பிரதமருக்கு மக்கள் மற்றும் பக்தர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஜென்மபூமி கோவிலின் சிகரத்தில் 161 அடி உயரத்திற்கு காவிக்கொடியை ஏற்றினார்., அதற்கு முன், அவர் சப்தமந்திர் மற்றும் பல கோவில்களில் தரிசனம் செய்தார். அயோத்தியில் ராமர் பிறந்த வம்சமான சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப் பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி ஏற்றி வைத்து வணங்கினார். இது வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது

முன்னதாக அயோத்திக்கு வந்த பிரதமர் வழியெங்கும் திரண்டு நிற்கும் ஏராளமான பாஜகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அயோத்தி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். . இதனைத் தொடர்ந்து 161 அடி உயர் கோவில் கோபுரத்தின் மீது 30 அடி உயர் கம்பத்தில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நடைபெற்றது. இதனால் அயோத்தி விழா கோலம் பூண்டுள்ளது.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதையடுத்து அங்கு கொடி மரணம் அமைக்கப்பட்டு உள்ளது. ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கொடி ஏற்றுதல் விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி கொடியை ஏற்றி வைத்தார்.
பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் சர்சங்கசலக் மோகன் பகவத் ஆகியோர் புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் சிகரத்தில் காவி கொடியை சம்பிரதாயமாக ஏற்றி, கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தெரிவித்தனர். அவர்களுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்துகொண்டார்.

10 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட வலது கோண முக்கோணக் கொடி, பகவான் ஸ்ரீ ராமரின் புத்திசாலித்தனம் மற்றும் வீரத்தைக் குறிக்கும் ஒரு கதிரியக்க சூரியனின் உருவத்தைத் தாங்கி நிற்கிறது, அதில் கோவிதார மரத்தின் உருவத்துடன் ‘ஓம்’ பொறிக்கப்பட்டுள்ளது. புனிதமான காவி கொடி கண்ணியம், ஒற்றுமை மற்றும் கலாச்சார தொடர்ச்சியின் செய்தியை வெளிப்படுத்துகிறது.
முன்னதாக, அயோத்தி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி அங்குள்ள சன்னதிகளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த தர்ம த்வஜா வெறும் கொடி அல்ல. இது இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் கொடி. காவி நிறம், சூரிய வம்சத்தின் சின்னம், ‘ஓம்’ வார்த்தை மற்றும் கோவிதார மரம் ராம ராஜ்ஜியத்தின் மகிமையை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கொடி ஒரு தீர்மானம், வெற்றி, படைப்புக்கான போராட்டத்தின் கதை, 100 ஆண்டுகளின் போராட்டத்தின் ஒரு உடல் வடிவம்… வரவிருக்கும் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளுக்கு, இந்தக் கொடி ராமரின் மதிப்புகளைப் பறைசாற்றும்… உண்மைதான் தர்மம்… பாகுபாடு அல்லது வலி இருக்கக்கூடாது, அமைதியும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும்… வறுமை இருக்கக்கூடாது, யாரும் உதவியற்றவர்களாக இருக்கக்கூடாது…” என்றார்.
.கோவிலுக்கு வர முடியாதவர்களும், தொலைவில் இருந்து கோவில் கொடியை வணங்கி வருபவர்களும் அதே புண்ணியத்தைப் பெறுகிறார்கள் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன…
இந்தக் கொடி ராம் லல்லா பிறந்த இடத்தை தூரத்திலிருந்து ஒரு பார்வையை வழங்கும், மேலும் ஸ்ரீராமரின் கட்டளைகளையும் ஊக்கத்தையும் அனைவருக்கும் தெரிவிக்கும். மனிதகுலம் யுகங்கள் தோறும் தொடரட்டும். இந்த மறக்க முடியாத தருணத்தில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ராம பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… இன்று அனைத்து பக்தர்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பங்களித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளி, கைவினைஞர், திட்டமிடுபவர், கட்டிடக் கலைஞர் மற்றும் தொழிலாளியையும் நான் வாழ்த்துகிறேன்…”
இவ்வாறு கூறினார்.